பழமொழி நானூறு
பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் 
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்--நல்லாய்! 
மணலுள் முழுகி மறைந்துகிடக்கும் 
நுணலுந்தன் வாயால் கெடும்.
__ பாடல்114 
Pazhamozhi 400
நல்லவளே! மணலுள்  முழுகி மறைந்து கிடக்கும் ஒரு தவளையும், தன் குரலைக் காட்டிக் கத்தி, தன் வாயின் செயலாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு அழிவு எய்தும். அதைப் போல பிறரைப்பற்றிய பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும் தன் சொல்லால் துன்புறுவான்.
