google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்: S. Alangulam
Showing posts with label S. Alangulam. Show all posts
Showing posts with label S. Alangulam. Show all posts

Wednesday, 25 December 2024

ஆனையூரில் இருந்து மாட்டுத்தாவணிக்கு பஸ்

பத்திரிகைச் செய்தி 26 டிசம்பர் 2024

ஆனையூரில் இருந்து மாட்டுத்தாவணிக்கு பஸ்கள் இயக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்

மதுரை, டிச. 26: மதுரை, ஆனையூரில் இருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டுமென, இந்திய கம் யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வடக்கு பகுதி எஸ்.ஆலங்குளம், அன்பு நகர், கோசாகுளம் மற்றும் செல்லூர் கிளைகளின் சார்பில் கிளை கூட்டங்கள் நடைபெற்றது. இதற்கு அர்ஜூனன் தலைமை வகித்தார். வடக்கு பகுதி செயலாளர் வீரணசிங்கம், பகுதி குழு மார்கண்டன், துணைச் செயலாளர் திருப் பதி உள்ளிட்டோர் கிளைக் கூட்டத்தை நடத் தினர். எஸ். ஆலங்குளம் 17 வது வார்டு கிளை செயலாளராகபொன்முத்துராமலிங்கம், 18வது வார்டு செயலாளராக நாகமணி, கோசாகுளம் 4வது வார்டு செயலாளராக ஐயாசாமி, அன்பு நகர் கிளைச் செயலாளர் சந்தானம், செல்லூர் கிளைச் செயலாளராக மார்க்கண்டன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில், மழையால் சேதம டைந்த சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். எஸ்.ஆலங்குளம் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க வேண்டும். ஆனையூரில் இருந்து மாட்டுத்தாவணிக்கு புதிதாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சந்தானம் நன்றி கூறினார்.