google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்: March 2024

Monday, 4 March 2024

சக்தி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்

 மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1974 செப்டம்பர் 9-ஆம் நாள் தொடங்கிய அகிலன் கருத்தரங்கைத் திறந்துவைத்தபோது டாக்டர் மு.வ. அவர்கள் பேசிய தொடக்கப் பேச்சு பின்வருமாறு:

"நான் இப்பொழுது வகித்துவரும் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியிலிருந்து சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடலாம்; அதற்குப் பின்னர்ச் சில ஆண்டுகள் ' ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்து அதிலிருந்தும் ஓய்வு பெறலாம். ஆனால் என்னுடைய வாழ்க்கையின் கடைசி மூச்சுள்ளவரை நான் ஓய்வுபெற முடியாத - ஓய்வுபெற விரும்பாத ஒரு துறை உள்ளது. அதுதான் எழுத்துத்துறை. அது என்னுடைய உயிருடன் கலந்துவிட்ட ஒன்று. என் உடலிலே சக்தி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன். எழுதமுடியாத ஒருநிலை வந்தால் மற்றவர்களை எழுதச்சொல்லி நான் கூறிக்கொண்டே இருப்பேன்.

Saturday, 2 March 2024

கனிமொழியானதும் தமிழே

தாயினுஞ் சிறந்தது தமிழே!


தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே

வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே.

பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே

பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே

தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே

தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே

முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே

குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே

பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே

அயன்மொழி பயில்வதும் தமிழே அயன்மொழி நினைவதும் தமிழே

குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே

நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே

தனிமொழி யானதும் தமிழே தாய்மொழி யானதும் தமிழே

கனிமொழி யானதும் தமிழே கலைமொழி யானதும் தமிழே!

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

ராகம்: எமுனாகல்யாணி

தாளம் : ஆதி