google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்

Sunday, 7 July 2024

அழகு சிரிக்கின்றது

 


F : அழகு சிரிக்கின்றது
M :
ஆசை துடிக்கின்றது
F :
பழக நினைக்கின்றது
M :
பக்கம் வருகின்றது
F :
அழகு சிரிக்கின்றது
M :
ஆசை துடிக்கின்றது
F :
பழக நினைக்கின்றது
M :
பக்கம் வருகின்றது
F :
பக்கம் வருகின்றது..
M :
வெட்கம் தடுக்கின்றது
F :
காதல் கனிகின்றது
M :
கையில் விழுகின்றது

M : வண்டு வருகின்றது.. மலரில் அமர்கின்றது(2)
F :
உண்டு சுவைக்கின்றது.. உறங்கி விழுகின்றது(2)
M :
வானம் பொழிகின்றது..
F :
பூமி நனைகின்றது..
M :
வானம் பொழிகின்றது..
F :
பூமி நனைகின்றது..
M :
மேனி குளிர்கின்றது..
F :
வெள்ளம் வடிகின்றது..

F : அழகு சிரிக்கின்றது
M :
ஆசை துடிக்கின்றது

M : இரவு விடிகின்றது…..இளமை எழுகின்றது(2)
F :
குளித்து வருகின்றதுகூந்தல் முடிக்கின்றது(2)
M :
அருகில் அம்ர்கின்றது
F :
அத்தான் எஙின்றது..
M :
அருகில் அம்ர்கின்றது
F :
அத்தான் எஙின்றது..
M :
ஆர்வம் பிறக்கின்றது
F :
அன்பை அழைக்கின்றது

F : அழகு சிரிக்கின்றது
M :
ஆசை துடிக்கின்றது
F :
பழக நினைக்கின்றது
M :
பக்கம் வருகின்றது
F :
அழகு சிரிக்கின்றது
M :
ஆசை துடிக்கின்றது

Actors: Sivaji Ganesan and Saroja Devi

Singers: T.M. Soundarrajan and  P. Susheela

Lyrics: Kannadasan

Music: K.V. Mahadevan

Director: L.V. Prasad

azhagu sirikkindrathu aasai thudikkindrathu
pazhaga ninaikindrathu pakkam varugindrathu
azhagu sirikkindrathu aasai thudikkindrathu
pazhaga ninaikindrathu pakkam varugindrathu
pakkam varugindrathu vetkkam thadukkindrathu
kaadhal kanigindrathu kaiyil vizhugindrathu

vaNNdu varugindrathu malaril amargindrathu(2)
uNNdu suvaikindrathu uRangi vizhugindrathu (2)
vaanam pozhigindrathu boomi nanaigindrathu(2)
mEani kuLirgindrathu veLLam vazhigindrathu

………azhagu sirikkindrathu………….

iravu vidigindrathu iLamai ezhugindrathu
kuLithu varugindrathu koondhal mudikkindrathu
arugil amargindrathu aththaan engindrathu(2)
aaNNmai vizhikkindrathu aLLi aNaikkindrathu

………azhagu sirikkindrathu………….

Monday, 4 March 2024

சக்தி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்

 மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1974 செப்டம்பர் 9-ஆம் நாள் தொடங்கிய அகிலன் கருத்தரங்கைத் திறந்துவைத்தபோது டாக்டர் மு.வ. அவர்கள் பேசிய தொடக்கப் பேச்சு பின்வருமாறு:

"நான் இப்பொழுது வகித்துவரும் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியிலிருந்து சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடலாம்; அதற்குப் பின்னர்ச் சில ஆண்டுகள் ' ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்து அதிலிருந்தும் ஓய்வு பெறலாம். ஆனால் என்னுடைய வாழ்க்கையின் கடைசி மூச்சுள்ளவரை நான் ஓய்வுபெற முடியாத - ஓய்வுபெற விரும்பாத ஒரு துறை உள்ளது. அதுதான் எழுத்துத்துறை. அது என்னுடைய உயிருடன் கலந்துவிட்ட ஒன்று. என் உடலிலே சக்தி இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன். எழுதமுடியாத ஒருநிலை வந்தால் மற்றவர்களை எழுதச்சொல்லி நான் கூறிக்கொண்டே இருப்பேன்.

Saturday, 2 March 2024

கனிமொழியானதும் தமிழே

தாயினுஞ் சிறந்தது தமிழே!


தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே

வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே.

பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே

பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே

தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே

தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே

முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே

குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே

பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே

அயன்மொழி பயில்வதும் தமிழே அயன்மொழி நினைவதும் தமிழே

குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே

நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே

தனிமொழி யானதும் தமிழே தாய்மொழி யானதும் தமிழே

கனிமொழி யானதும் தமிழே கலைமொழி யானதும் தமிழே!

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

ராகம்: எமுனாகல்யாணி

தாளம் : ஆதி

Wednesday, 28 February 2024

கந்தர் அலங்காரம் பாடல் 38

 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் பாடல் 38


நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.


சொற்பிரிவு


நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த

   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு

      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்

         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.


பதவுரை


நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?

அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய

இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு

திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு

திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்

அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.


Sunday, 25 February 2024

Friday, 23 February 2024

எஸ் ஆலங்குளத்துக்கு மதுரை குழாய்த் தண்ணீர்

 எஸ் ஆலங்குளத்துக்கு மதுரை குழாய்த் தண்ணீர் இன்று 23. 02. 2024 மாலை வந்தது. 


வீடியோ எடுத்த இடம் ஸ்ரீ ராகவேந்திரா நகர் அன்பு நகர் பிரதம மந்திரி மக்கள் மருந்தகம் அருகில், மதுரை 625017. 

Wednesday, 21 February 2024

இப்படியும் சோறு வடிக்கலாம்

 இருப்பதைக் கொண்டு சமாளிப்பது எப்படி?


கொதிக்கும் சோற்றை இறக்கியபின் இப்படிக்கூட வடிக்கலாம். வடித்த கஞ்சித் தண்ணீரை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

Tuesday, 25 January 2022

ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க் கவிதை, கஸல்

ஹைக்கூ:

ஹைக்கூ’ ஜப்பானிய  மொழிக் கவிதை.  3 அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள் கொண்ட  ஜப்பானிய  ஹைக்கூ  ஐந்து,  ஏழு,  ஐந்து  சீர்களைக்  கொண்டு  17 சீர்களில்  ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு  இந்த  சீர்  எண்ணிக்கை தேவையில்லை). ஜென்  தத்துவத்தோடு  இயற்கை  மற்றும்  மெய்யியலோடு  தொடர்பு கொண்டது. கவித்துவம்  கொண்டது.  இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட) சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது என்ற  போதிலும்  எப்படியோ  இந்தியாவில்  (தமிழ்நாடு  உள்பட)  ஓர் இலக்கிய  வடிவமாக  /  கவிதையாக   இடம்  பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக  தமிழ்நாட்டு ஹைக்கூ  3  அடிகள்  கொண்டு எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ் அறிஞர்கள்  ஏற்றுக்கொண்டு    ‘ஹைக்கூ’  வடிவமாகவும்
அங்கீகரித்துள்ளார்கள். இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின் உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  தமிழ்  ‘ஹைக்கூ’  இயற்கை, மெய்யியல்  மற்றும்  கவித்துவம்  கொண்டதாக  இருப்பது  சிறப்பு.


இன்று  எழுதப்படுவதெல்லாம்  ‘புதுக்கவிதை’  என்பது  போல  ‘ஹைக்கூ
பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  3  அடிகள்கொண்டு  எழுதப்படுவது
எல்லாம்  ‘ஹைக்கூ’  என்பதால்  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  தாழ்ந்துபோய்
உள்ளது.   ஜப்பானிய  ஹைக்கூவின்  தமிழ்  மொழிபெயர்ப்பை  தவிர்த்து
விட்டால்  1974இல்  கவிக்கோ  அப்துல்  ரகுமான்  தமிழில்  முதன்முதலாக
ஹைக்கூ  படைத்துள்ளார்.  இன்று  பல  ஆயிரம்  பேர்  தமிழில்  ஹைக்கூ
எழுதி  வருகிறார்கள்.  தமிழில்ஹைக்கூவிற்கென்றே  சில  தனி
சிற்றிதழ்கள்  வெளிவந்து  கொண்டுள்ளன.

ஹைக்கூ  மரபுகள்:


1.  
ஹைக்கூ மூன்று  வரியாக  இருக்க  வேண்டும்.
2.  
ஹைக்கூவுக்குத்  தலைப்பிட்டு  எழுதக்  கூடாது.  ஒரு  ஹைக்கூவிற்கு
இரண்டுக்கு  மேற்பட்ட  அல்லது  குறைந்த  பட்சம்  இரண்டு  உட்கருத்தாவது
(
குறியீடு  போல;  உட்பொருள்)  இருக்க  வேண்டும்.

கவிக்கோ  அப்துல்  ரகுமான்  கூற்று:
ஹைக்கூவில்  நாம்  கடைபிடிக்க  வேண்டிய  மூன்று  முக்கிய  மரபுகள்  உண்டு.
1.
ஹைக்கூவில்  முதல்  அடி  ஒரு  கூறு.  ஈற்றடி  ஒரு  கூறு. ஹைக்கூவின் அழகும்  ஆற்றலும்  ஈற்றடியில்தான்  உள்ளது.  ஈற்றடி  ஒரு  திடீர் வெளிப்பாட்டை,  உணர்வு  அதிர்ச்சியை  ஏற்படுத்தி  முழுக்  கவிதையையும் வெளிச்சப்படுத்த  வேண்டும்.

2. மற்றொரு  மரபு  ஹைக்கூவின்  மொழி  அமைப்பு.  ஹைக்கூவின்  மொழி  ஊழல் சதையற்ற  மொழி.  தந்தி  மொழியைப்  போல்,  அவசியமற்ற  இணைப்புச்  சொற்களை விட்டு  விட  வேண்டும்.


3.
உயிர்  நாடியான  ஈற்றடியில்  ஆற்றல்  மிக்க  வெளிப்பாட்டிற்காகப்
பெயர்ச்  சொல்லையே  பயன்படுத்த  வேண்டும்.


மேற்கண்டவற்றை  ஹைக்கூப்  படைப்பாளர்கள்  கடைபிடிக்க  வேண்டும்.
ஏனென்றால்  ஹைக்கூவின்  அடையாளமும்,  அழகும்,  ஆற்றலும்  இவற்றில்தான் இருக்கின்றன.

ஹைக்கூ  வாசிப்பு  முறை:

ஹைக்கூவை  முறையாக  எப்படி  வாசிக்க  வேண்டும்  என்ற  புரிதல்  ஹைக்கூ எழுதுபவர்களுக்குக்  கூட  தெரியாமல்  இருப்பது  வினோதமானது.  3  அடிகள் கொண்ட ஹைக்கூவை  முதல்  இரண்டு  அடிகளை  தொடர்ந்து  படித்து  நிறுத்த வேண்டும்(மூன்றாவது  அடியைப்  படிக்கக்  கூடாது).  மீண்டும்  முதல் இரண்டு  அடிகளை  படித்து  நிறுத்தி  மூன்றாவது  அடியைப்  படிக்க வேண்டும்.  அப்படிப்  படிக்கும்  போது  அந்த  இறுதி  அடி  எதிர்பாராதத்
திருப்பம்  கொண்டதாக  இருக்க  வேண்டும்.  இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த  எளிமையான  முறையை  மட்டுமே  கடைபிடித்தால்  கூட  அவர்கள்  எழுதும் ஹைக்கூவை  மேலும்  சிறப்பாகப்  படைக்க  முடியும்.

சென்ரியு:


(
சுருக்கமாகச்  சொல்வதென்றால்  கவித்துவம்  அதிகமாக  இருந்தால்ஹைக்கூ’.  கவித்துவம்  குறைந்து  நகைச்சுவை  உணர்வு  மேலோங்கி  இருந்தால்  அது சென்ரியு’. )

சென்ரியுவும்   ஜப்பானிய  மொழிக்கவிதை.  3  அடிகள்  கொண்டது.   ஜென்

தத்துவம்,  இயற்கை  மற்றும்  மெய்யியலோடும்  சிறிது  தொடர்பு  கொண்டு
நகைச்சுவை  உணர்வை  நோக்கமாகக்  கொண்டு  எழுதப்படுவது  சென்ரியு ஆகும்.

சென்ரியு  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்து  நகைச்சுவை  உணர்வோடும் அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்தும்.

தமிழ்நாட்டு  ‘சென்ரியு’  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு
3  
அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘சென்ரியு’  வடிவமாகவும்
அங்கீகரித்துள்ளார்கள்.  இது  இந்திய  சமூகம்,  அரசியல்  ஆகியவை  குறித்த
 
போக்கை  நகைச்சுவை  உணர்வோடும்  அங்கத  உணர்வோடும்  வெளிப்படுத்த  ஏற்ற மிகச்  சிறந்த  வடிவம்  ஆகும்.  எனவே  இந்தியாவின்  சூழலுக்கு  தமிழில் ஹைக்கூவை  விட   ‘சென்ரியு’  சிறந்த  வடிவம்  /உள்ளடக்கம்  ஆகும்.

தமிழில்  முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘சென்ரியு’  படைத்துள்ளார்.

தமிழில்  சிலரே  ‘சென்ரியு’  எழுதி  வருகிறார்கள்.  தமிழில்  ‘ஹைக்கூ
பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  எழுதப்படும்  ‘ஹைக்கூ’  எல்லாம்
சென்ரியுகவிதையாகவே  காணப்படுகின்றன.


லிமரைக்கூ:


ஆங்கிலத்தில்  ‘லிமரிக்’  என்பது  ஒரு  கவிதை  வடிவம்.  5  அடிகளில்
அமையும்  இந்தக்  கவிதை  வடிவம்  முக்கியமாக  வேடிக்கை,  வினோதம்,
நகைச்சுவை  முதலிய  உணர்வோடு  இயங்கக்  கூடியது.

தமிழில் முதன்முதலாக  ஈரோடு  தமிழன்பன்  ‘லிமரைக்கூவைப்  படைத்துள்ளார்.

தமிழில் முதன்முதலாக   ‘லிமரைக்கூவைப்  படைத்த  ஈரோடு  தமிழன்பன்
ஆங்கிலத்தின்  ‘லிமரிக்’  வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில்
பயின்று  வரும்  இயைபுத்  தொடையை  1 (முதல்)  மற்றும்  3 (இறுதி)
அடிகளில்  இணைத்து]  ஜப்பானிய  ‘ஹைக்கூவின்  வடிவத்தையும்  இணைத்து  3 அடிகள்  கொண்டு  ‘லிமரைக்கூ’  என்ற  புதிய  தமிழ்க்  கவிதை  வடிவத்தை தமிழில்  ஆரம்பித்து  வைத்தார்.  இவ்வடிவமே  தமிழின்  லிமரைக்கூ  வடிவமாக அமைந்து  விட்டது.  3  அடிகளிலும்  சந்தம்  கண்டிப்பாக  இருக்க வேண்டும்  என்ற  விதி  இல்லை.  ஈரோடு  தமிழன்பன்  தமிழுக்கு முதன்முறையாக  லிமரைக்கூவை  அறிமுகம்  செய்து  வைத்தபோது  சந்தம் கடைபிடிக்கப்பட்டது.  (அவ்வாறு  சந்தம்  அமைத்துக்  கொண்டது  ஈரோடு தமிழன்பனின்  தனி  உத்தி.)  மூன்று  வரி,  சந்தம்  மட்டுமே  லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ,  சென்ரியுவின்  இணைப்புதான்  லிமரைக்கூ.

 

தேன்  நிரம்பி  வழிந்தது
வண்ணத்துப்  பூச்சி  பறந்து  சென்றது
பூ  தலைக்  கவிழ்ந்தது

-        இது  சந்தம்  கொண்டு  அமைந்த லிமரைக்கூ.

 

ஜனகணமன  பாடியது
மரியாதையுடன்  கூட்டத்தில்  பொது  மக்கள்
அரசியல்வாதி  கொட்டாவி  விட்டது

-        இது  இயைபுத்  தொடை கொண்டு  அமைந்த லிமரைக்கூ.

இன்று  தமிழில்  இவ்வகை  வடிவங்களைத்  தவிர ஹைபுன்,  லிபுன்,  குறட்கூ,
சீர்க்  கவிதை, கஸல்  எனப்  பல  வடிவங்கள்  உருவாகிக்  கொண்டு இருக்கின்றன.

குறட்கூ: 

குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும். முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும் சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம். இக்கவிக்கு வித்திட்டவர் கவிஞர் தணிகைச் செல்வன் ஆவார்.