google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்: December 2017

Wednesday, 20 December 2017

Rhyme on Dosai




Dosai Amma Dosai
1:
Dosai Amma Dosai
Arachu sutta dosai
Appavukku nalu
Annanukku moonu
Akkavukku rendu
Enakkumattum onnu
Thinna thinna aasai
innum kettal poosai
Kodukka kodukka aasai
edukka ponal poosai

2:
Dosai amma dosai amma chutta dosai
Arisi maavum ulundu maavum araittu chutta dosai
Appaavukku naangu ammaavukku moondru
Annaavukku rendu paappaavukku ondru
Aha mottham patthu
Thinna thinna aasai innum ketaal poosai
Kudukka kudukka aasai Edukka ponaal poosai

தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ணனுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஓன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்

Wednesday, 13 December 2017

Uruvai Aruvai Kandhar Anuboothi






Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 51

Uruvai aruvai uladhai iladhai
maruvai malarai maniyai oliyai
karuvai uyirai gadhiyai vidhiyai
guruvai varuvai arulvai guhaney

O! Lord Muruga you are the one with the form, you are also one without a form. You are the one who has it all, and you are the one who does not have it all, you are present in the smallest, in the flower, in the ring of the bell, and in the Light. You are the embryo, you are the life, you are the destiny, and you are the fate. Please come upon us as our Guru and bestow your blessings.
கந்தர் அநுபூதி பாடல் 51
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
   மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
      கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
         குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
 பதவுரை:

உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!

Tuesday, 5 December 2017

Saturday, 2 December 2017

Vallalar’s Advice for Growing Children

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
1.                   நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.
2.                   தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
3.                   மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
4.                   ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
5.                   பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
6.                   பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
7.                   இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
8.                   குருவை வணங்கக் கூசி நிற்காதே.
9.                   வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.

10.               தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.