Kandhar Anuboothi by Thiru Arunagirinathar - 51
Uruvai aruvai uladhai iladhai
maruvai malarai maniyai oliyai
karuvai uyirai gadhiyai vidhiyai
guruvai varuvai arulvai guhaney
O! Lord Muruga you are the one
with the form, you are also one without a form. You are the one who has it all,
and you are the one who does not have it all, you are present in the smallest,
in the flower, in the ring of the bell, and in the Light. You are the embryo,
you are the life, you are the destiny, and you are the fate. Please come upon
us as our Guru and bestow your blessings.
கந்தர் அநுபூதி பாடல் 51
உருவாய் அருவாய்
உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
பதவுரை:
உருவமுள்ளவராகவும்,
உருவமில்லாதவராகவும்,
உள்ள பொருளாகவும்,
காணவியலாத பொருளாகவும்,
நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும்
ஒளியாகவும், உயிர் இடம்பெறும்
கருவாகவும், உடலாகவும்,
உயிராகவும் நற்கதியான
புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும்
குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு
அருள்புரிவீராக!
No comments:
Post a Comment