google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Alangulam ஆலங்குளம்: Yadhum Oore Yaavarum Kelir

Saturday, 17 February 2018

Yadhum Oore Yaavarum Kelir



Poongundram is the old name of a village, Mahibalanpatti, near Ponnamaravathi in Pudukkottai district of Tamil nadu, India. The name of the poet who wrote the 192nd song of Purananooru is unknown. He might be an astrologer, palmist, fortune teller, mathematician, or karnam/surveyor. Kaniyan means kanippavar. Hence the name Kaniyan Poongundranar. 

யாதும் ஊரே யாவரும் கேளிர்


புறநானூறு 192, பாடியவர் கணியன் பூங்குன்றனார்திணை பொதுவியல்துறை பொருண்மொழிக் காஞ்சி
பாடல் பின்னணி:  கணியன் பூங்குன்றனார் வேந்தரையும், வள்ளலையும் புகழ்ந்து பாடாமல், உலக இயல்பைப் பற்றிப் பாடுகின்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும்  அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
பொருளுரை:   யாவும் நமது ஊர் தான்.  அனைவரும் நமது உறவினர் தான்.   தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை.   துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்த்தலும் அதைப் போன்றவை தான்.  சாதல் என்பது புதிது இல்லை.  வாழ்தல் இனிமையானது என்று மகிழ்தலும் இல்லை.   வெறுப்பால் வாழ்க்கை இனியது இல்லை என்று கூறுவதும் இல்லை.  மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால் முடிவில்லாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே செல்லும் தெப்பத்தைப் போன்று, நம் வாழ்க்கை முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகள் மூலம் அறிந்தோம்.  ஆதலால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் கண்டு வியப்பதும் இல்லை.    சிறியோர் என்று யாரையும் இகழ்தலும் இல்லை.


பதவுரை  யாதும் அனைத்தும், ஊரே நமது ஊர், யாவரும் அனைவரும், கேளிர் உறவினர்தீதும் தீயவையும், நன்றும் நல்லவையும், பிறர் தர பிறர் தருவதால், வாரா வருவதல்ல, நோதலும் வருந்துவதும், தணிதலும் அது தீர்வதும், அவற்றோர் அவற்றை, அன்ன போல, சாதலும் சாவது, புதுவது புதிது, அன்றே  –  இல்லை, வாழ்தல் வாழ்தல், இனிது என இனியது என, மகிழ்ந்தன்றும் மகிழ்வதும், இலமே இல்லை, முனிவின் வெறுத்து, இன்னாது துன்பம் மிக்கது, என்றலும் என்று சொல்வதும், இலமே இல்லை, மின்னொடு மின்னலுடன், வானம் வானம், தண் துளி –  குளிர்ந்த மழைத் துளி, தலைஇ பெய்வதால், ஆனாது இடை விடாது, கல் பொருது கல்லுடன் மோதி, இரங்கும் ஒலிக்கும், மல்லல் வலிமை மிக்க, பேர்யாற்று பெரிய ஆற்றின்நீர் வழிப்படூஉம் நீரின் ஓட்டத்தின் வழியே செல்லும், பயணப்படும், புணை போல மிதவை போல,  தெப்பம் போலஆர் உயிர் –  அரிய உயிர், முறை வழிப்படூஉம் முறைப்படி செல்லும், என்பது என்பது, திறவோர் திறம் கொண்டு அறிந்தோர், காட்சியின் தந்த அறிவின் மூலம், தெளிந்தனம் தெளிவு பெற்றோம், ஆகலின் ஆனதால், மாட்சியின் பெருமை மிக்க, பெரியோரை பெரியவர் என்று, வியத்தலும் வியந்து அடிபணிவதும், இலமே இல்லைசிறியோரை சிறியோர் என்று, இகழ்தல் –  பழித்தல், அதனினும் அதனை விட, இலமே இல்லை

No comments:

Post a Comment